ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் பெறுவதற்கு கூத்தாநல்லூர் பகுதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி

ரூ.2 ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் பெறுவதற்கு கூத்தாநல்லூர் பகுதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது.

Update: 2021-06-13 11:00 GMT
கூத்தாநல்லூர்,

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தடு்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தி.மு.க.தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையில் ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டது.

கடந்த 3-ந்தேதி 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வருகிற 15-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

டோக்கன் வழங்கும் பணி

இதனையொட்டி கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ேரஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும்போது அவசியம் முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் எடுத்து கூறினர்.

மேலும் செய்திகள்