தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் போராட்டம்

தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் போராட்டம்.

Update: 2021-06-13 15:11 GMT
விழுப்புரம்,

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மறை மாவட்டங்களில் காலங்காலமாக இதுவரை நியமிக்கப்படாத பேராயர், ஆயர் பணியிடங்களில் விகிதாச்சார அடிப்படையிலும், சமத்துவத்தின் அடிப்படையிலும் தலித் கிறிஸ்தவ பேராயர், ஆயர்களை நியமனம் செய்ய வேண்டும், இந்திய ஆயர் பேரவை, தமிழ்நாடு ஆயர் பேரவையில் நிகழும் சாதிய தீண்டாமை போக்கு, சமத்துவமின்மை, சாதிய பாகுபாடுகள் ஆகியவை களையப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு தலித் கிறிஸ்தவர் கூட்டமைப்பின் சார்பில் தேவாலயங்கள், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், பொது இடங்களில் சட்டையில் கருப்பு பட்டை அணிந்தும் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை திருச்சபையின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விழுப்புரம், ஆற்காடு, முகையூர், ஆயந்தூர், செஞ்சி, சத்தியமங்கலம், ஒதியத்தூர், கொம்மேடு, அணிலாடி, நங்காத்தூர், செங்காடு, மாதம்பட்டு, இருந்தை, மாரனோடை, சித்தானங்கூர், எறையூர், வளவனூர் உள்ளிட்ட இடங்களில் தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு தலித் கிறிஸ்தவர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்