ஆலோசனை கூட்டம்

போடி நகராட்சி அலுவலகத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2021-06-15 17:19 GMT
போடி : 

போடியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. 

கூட்டத்தில் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசுகையில், போடி முனிசிபல் காலனி திட்ட பகுதியில் மொத்தம் 352 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் 267 பயனாளிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 85 பேருக்கான தேர்வு நடைபெற உள்ளது என்றார்.   




கூட்டத்தில் போடி நகராட்சி ஆணையர் சகிலா, பொறியாளர் குணசேகரன், குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் குபேந்திரன், தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ், முன்னாள் துணைத் தலைவர் சங்கர், முன்னாள் தி.மு.க. நகர செயலாளர்கள் பக்கீர் முகமது, ரமேஷ், தி.மு.க. பிரமுகர் அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்