விதிமுறைகள் மீறல்; கடைக்காரர்கள்- பொதுமக்களுக்கு அபராதம்

விதிமுறைகள் மீறல் தொடர்பாக கடைக்காரர்கள்- பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-17 20:44 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைக்காரர்கள் விதிமுறைகளை கடைபிடிக்கின்றனரா? முககவசம் அணிந்து பொதுமக்கள் வெளியில் வருகின்றனரா? என நகராட்சி சார்பில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினரால் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் சமூக இடைவெளியின்றி கூட்டம், கூட்டமாக வாடிக்கையாளர்கள் நின்றதால் கடைக்காரர்களுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.11 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. கடைவீதிகளில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 வீதம் 6 பேருக்கு ரூ.1,200 அபராதமாக விதித்து வசூலிக்கப்பட்டது. ஆய்வின்போது வருவாய் உதவியாளர்கள் சரஸ்வதி, பிரேம்குமார், சந்துரு மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் உள்ளிட்ட நகராட்சி அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர். விதிமுறைகளை மதிக்காமல் திறந்திருந்த செல்போன் கடைகள் மற்றும் வாகன பழுது நீக்கும் பட்டறைகள் உள்ளிட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்