கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 926 ஆக குறைந்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 926 ஆக குறைந்தது.

Update: 2021-06-18 17:16 GMT
புதுக்கோட்டை, ஜூன்.19-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 926 ஆக குறைந்தது.
83 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தினமும் தொற்று பாதிப்பு 100-க்கும் கீழே குறைந்துள்ளது. அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து20 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து810 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 2 பேர் பலி
கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் இறப்பு எண்ணிக்கை மாவட்டத்தில் 284 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழே குறைந்து 926 ஆக உள்ளது.
தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் 21-ந் தேதி முதல் நகர பஸ்கள் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரிமளம்
அரிமளம், கீழாநிலை அரச ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும், கடியாபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 3 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மேலும் செய்திகள்