ஊரடங்கை மீறி திறந்த 2 ஜவுளி கடைகளுக்கு சீல்

திருக்கோவிலூரில் ஊரடங்கை மீறி திறந்த 2 ஜவுளி கடைகளுக்கு சீல்

Update: 2021-06-18 17:34 GMT
திருக்கோவிலூர்

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும் குறிப்பிட்ட கடைகள் மற்றும் ஓட்டல்கள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அரசு அனுமதித்துள்ளது. ஜவுளி, நகை மற்றும் பாத்திரம் ஆகிய கடைகளை திறக்க அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் திருக்கோவிலூர் மேல வீதியில் 2 ஜவுளி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுவதாக திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் திருக்கோவிலூர் மேலவீதிக்கு வந்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 2 ஜவுளி கடைகளையும் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்