ஆடு திருடியவர் கைது

ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-18 21:14 GMT
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம்போல் ஆடுகளை அவர் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை, ஒரு வாலிபர் திருடிச்சென்றார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிய கோவிந்தராசு, ஒரு ஆடு இல்லாததை கண்டு கிராமம் முழுவதும் மற்றும் பக்கத்து கிராமங்களிலும் தேடி உள்ளார். ஆனால் ஆடு கிடைக்காததால், இது குறித்து செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் ஆடுகளை வாங்கி விற்பனை செய்பவரிடம் விசாரித்தால் தகவல் கிடைக்கும் என்று எண்ணிய அவர், அது பற்றி விசாரித்தபோது உஞ்சினி கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரிடம், அந்த வாலிபர் திருடிய ஆட்டை விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராசு, அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து செந்துைற போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பொய்யாநல்லூர் கிராமத்தை சேர்ந்த சரவணன்(வயது 27) என்பதும், தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்