சாராயம் கடத்திய 5 பேர் கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-20 16:52 GMT
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
 
சாராயம் கடத்தல்

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதிகளில் கடந்த 8-ந்தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சாராயம் மற்றும் மதுபானங்கள் மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வருவதை தடுப்பதற்காக நாகை மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீழ்வேளூர் போலீசார் கீழ்வேளூர் கடை வீதி, கானூர் சோதனை சாவடி பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது திருவாரூர், புலிவலத்தை சேர்ந்த கணேசன் மகன் பிரவின் (வயது 23), திருவாரூர், தக்களூர். கல்லடிதெருவை சேர்ந்த லட்சமணன் மகன் சந்தோஷ் (21), மன்னார்குடி, பாமணி, மேலத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமராஜன் (28), கீழ்வேளூர், கே.கே.நகரை சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் (25). வேதாரண்யம் கருப்பம்புலம் மேலக்காடு ராயநல்லூரை சேர்ந்த கணபதி மகன் பாஸ்கர் (27). ஆகிய 5 பேரும் காரைக்கால் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
5 பேர் கைது

 இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்