கொரோனாவுக்கு வாலிபர் சாவு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். மேலும் கள்ளக்குறிச்சியில் புதிதாக 157 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Update: 2021-06-21 17:58 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 41,632 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 323 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 39,922 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்  இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே மழவந்தாங்கலை சேர்ந்த 33 வயதுடைய வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 25 ஆயிரத்து 843 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 ஆயிரத்து 514 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 188 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில் 950 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 157 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 843-ல் இருந்து 25 ஆயிரத்து 990-ஆக உயர்ந்துள்ளது. நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,288 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்