முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவி

தேசிய திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

Update: 2021-06-21 19:47 GMT
விருதுநகர், 
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. 2020-2021-ம் கல்வி ஆண்டிற்கான தேர்வு கடந்த 2020 டிசம்பர் மாதம் நடைபெற்றது. தற்போது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட 8-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் மாவட்டத்தில் 313 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி முத்து கீர்த்தனா விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளிகளின் அளவில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இவரை பள்ளி தலைமை ஆசிரியர் நளினி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்