ரேஷன் கடை முற்றுகை

மளிகை பொருட்கள் வழங்குவதில் முறைகேடு உள்ளதாக ரேஷன்கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-06-22 19:42 GMT
விருதுநகர், 
தமிழக அரசு கொரோனா 2-வது தவணை நிவாரண நிதியாக ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கடந்த 15-ந் தேதி முதல் நிவாரண நிதியும், மளிகை பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ரேஷன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்க வேண்டிய நிலையில் 2 பொருட்கள் குறைவாக வழங்கப்பட்டதாக ரேஷன் கார்டுதாரர்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அந்த ரேஷன் கடை முன்பு முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் பாட்ஷா ஆறுமுகம் தலைமையில் ரேஷன் கார்டுதாரர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த வட்ட வழங்கல் அலுவலர் பொன்ராஜ் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தி அந்த ரேஷன் கடை விற்பனையாளரை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுப்பதுடன், மளிகை பொருட்கள் குறைபாடு இல்லாமல் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்