கிணற்றுக்குள் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு

போடி அருகே கிணற்றுக்குள் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2021-06-23 10:02 GMT
போடி:

போடி அருகே உள்ள கீழச்சொக்கநாதபுரம் கிராமத்தில், முத்து கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான ேதாட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் 100 அடி ஆழமுள்ள கிணறு இருக்கிறது. அதில் 20 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. நேற்று காலை அந்த கிணற்றுக்குள் கன்றுக்குட்டி ஒன்று விழுந்து விட்டது.

தண்ணீரில் நீந்தியடி, கன்றுக்குட்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ஒரு மணி நேரம் போராடி, கயிறு கட்டி கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர். 

மேலும் செய்திகள்