சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2021-06-23 19:06 GMT
லாலாபேட்டை
லாலாபேட்டையில் பிரசித்தி பெற்ற செம்பருத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. 
தோகைமலை ஒன்றியத்திற்குட்ட ஆர்.டி.மலை மலை மீது விராச்சிலை ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நந்திபகவானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பு காசிவிஸ்வநாதர் கோவிலில் நந்திபகவானுக்கு பால், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி திருத்தேரில் எழுத்தருளி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தார்.

மேலும் செய்திகள்