இணையவழி கருத்தரங்கம்

தேவகோட்டையில் தமிழ் இலக்கியம் குறித்து இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2021-06-23 19:08 GMT
தேவகோட்டை,

தமிழ்நாடு மாணவர் செயற்களம், சருகணி இதயா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை, தேவகோட்டை தே பிரித்தோ மேனிலைப்பள்ளியின் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து ‘தமிழ்ப்பெருங்கவிஞர்களும் தமிழர் இலக்கியங்களும்' என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கை நடத்தின. மகாகவி பாரதியார்  பாவேந்தர் பாரதிதாசன்- முடியரசன் ஆகிய முப்பெருங்கவிஞர்களையும் உலகப்பொதுமறையான திருக்குறள், முத்தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழர் இலக்கியங்களையும் போற்றிச் சிறப்பிக்கும் விதமாக 3 நாட்கள் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தலைவர் அருட்பணி ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். இதயா மகளிர் கல்லூரியின் முதல்வர் ஜோதிமேரி முன்னிலை வகித்தார். வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் ஸ்டீபன் மிக்கேல் ராஜ் கருத்தரங்க உரை ஆற்றினார்.

மேலும் செய்திகள்