பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

Update: 2021-06-23 19:31 GMT
பல்லடம்,
பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில்வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி பிரதான் மந்திரி கிராம சுரக்சா யோஜனா திட்டத்தின் கீழ் பல்லடம்- திருப்பூர் சாலை முதல் இடுவம்பாளையம் வரை  சாலை மேம்பாட்டு பணி நடக்கிறது.
பருவாய் ஊராட்சி அப்பநாயக்கன்பட்டி முதல் சின்ன கோடங்கிபாளையம் வரை சாலை மேம்படுத்துதல் பணியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மலையம் பாளையத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கரைப்புதூர் ஊராட்சி அக்கணம் பாளையத்தில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், உள்ளிட்ட மொத்தம் ரூ.3 கோடியே 24 லட்சத்து 9 ஆயிரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.
அப்போது வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், கரைப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிச்சாமி பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்