மனைவி உள்பட 3 பெண்களுக்கு கத்திக்குத்து; மாமியாரின் தங்கை சாவு

மனைவி உள்பட 3 பெண்களை வாலிபர் கத்தியால் குத்தினார். இதில் மாமியாரின் தங்கை கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு ரத்தம் சொட்டிய கத்தியுடன் நின்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-23 20:05 GMT
சாத்தூர், 
மனைவி உள்பட 3 பெண்களை வாலிபர் கத்தியால் குத்தினார். இதில் மாமியாரின் தங்கை கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு ரத்தம் சொட்டிய கத்தியுடன் நின்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காதல் திருமணம் 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அண்ணாநகர் பகுதிைய சேர்ந்தவர், சந்திரா. இவருடைய மகள் முனீசுவரி (வயது 26).  இவரும், தாயில்பட்டி அருகே கட்டனஞ்செவல் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் (29) என்பவரும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சரண்யா (6), சுபா (4) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 
சமீப காலமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து ராம்குமாரை விட்டு பிரிந்து, முனீசுவரி, தனது தாய் சந்திரா வீட்டிற்கு வந்துவிட்டார். 
கத்திக்குத்து 
இந்த நிலையில் மனைவியை பார்க்க ராம்குமார் நேற்று முன்தினம் இரவு வந்தார். அப்போது அவர் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு முனீசுவரியை அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. 
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. அப்போது அங்கு வந்த சந்திராவின் தங்கை மாரியம்மாள் என்ற ஆயிரம் கண்ணு (55) இதுகுறித்து தட்டிக்கேட்டுள்ளார். உடனே ராம்குமார் அவரை கீேழ தள்ளிவிட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியதில் மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். 
இதனை தடுக்க ஓடிவந்த மனைவி முனீசுவரி, மாமியார் சந்திரா ஆகியோரையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே அவர்கள் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அதற்குள் மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். 
கைது
ஆனால், ராம்குமார் அங்கிருந்து ஓடாமல் ரத்தம் சொட்டிய கத்தியுடன் அங்கேயே நின்றிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த முனீசுவரி, சந்திரா ஆகிய இருவரையும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாரியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமாைர போலீசார் கைது செய்தனர்.
 இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்