அதிராம்பட்டினம் கடல் பகுதியில் சூறைக்காற்று: கரை ஒதுங்கும் கரும்பு பாசிகள்

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக கரும்பு பாசிகள் கரை ஒதுங்கி வருகின்றன.

Update: 2021-06-23 20:27 GMT
அதிராம்பட்டினம்:-

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக கரும்பு பாசிகள் கரை ஒதுங்கி வருகின்றன.

கரும்பு பாசிகள்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியான கரையூர் தெரு, காந்திநகர், தரகர் தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது.  இதன் காரணமாக கரும்பு பாசிகள் எனப்படும் ஒரு வகை பாசிகள் கரை ஒதுங்கி வருகின்றன. கடலுக்கு செல்லும் மீனவர்கள் வலையில் கரும்புபாசி சிக்கிக்கொள்வதால் மீன்கள் பிடிபடுவதும் குறைந்து விடுவதாக மீனவர்கள் கூறுகிறார்கள். 

கடல் சீற்றம்

சூறைக்காற்று காரணமாக உவர் நீரில் வளரும் தாவரங்களான கரும்பு பாசி, கடல் தாழைகள் உள்ளிட்டவை அறுந்து கடல் முழுவதும் மிதக்கிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘கடலுக்கு அடியில் பவள பாறைகள், பாசிகள், புற்கள் உள்ளன. இதில் கரும்பு பாசி எனப்படும் ஒரு வகை தாவரமும் ஒன்று. இந்த வகை பாசிகள் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. 
கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று வீசும்போது கரும்பு பாசிகள் கரை ஒதுங்குகிறது. இவை மீன்களுக்காக விரிக்கப்படும் வலையின் துவாரக்கண்களை அடைத்துவிடுகிறது. இதனால் மீன்கள் அகப்படுவது அரிதாகிவிடுகிறது’ என்றனர்.

மேலும் செய்திகள்