திருப்பூர்,பல்லடத்தில் போக்குவரத்து கூட்டமைப்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர்,பல்லடத்தில் போக்குவரத்து கூட்டமைப்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-06-26 19:05 GMT
திருப்பூர்
திருப்பூர்,பல்லடத்தில் போக்குவரத்து கூட்டமைப்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர்
அரசு போக்குவரத்து கூட்டமைப்பு தொழிற் சங்கங்கள் சார்பாக திருப்பூர் முதலாவது பணிமனையான காங்கேயம் ரோட்டில் உள்ள சி.டி.சி டெப்போ முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப்.கிளை செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வேளாண் சட்டத்திருத்தம், தொழிலாளர் சட்ட திருத்தம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செல்லத்துரை, மனோகர் (சி.ஐ.டி.யு.), குமரேசன் (ஏ.ஐ.டி.யு.சி.), முருகானந்தம் (எல்.பி.எப்.), துரைசாமி (ஏ.எல்.எல்.எப்.), அபுதாகீர் (டி.டி.எஸ்.எப்.) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பல்லடம்
இதேபோல் பல்லடம் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் போக்கு வரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி. எப். சங்க தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். செயலாளர் சிவசுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் செந்தில்குமார், சி.ஐ.டி.யு. பொருளாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணசாமி வரவேற்றார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சின்னக்கண்ணன், பரமசிவம், கந்தசாமி, சக்திவேல் உள்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்