ஆண்டிமடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ஆண்டிமடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2021-06-26 20:50 GMT
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின் வினியோகம் பெறும் பகுதிகளான ஆண்டிமடம், கூவத்தூர், அணிக்குதிச்சான், குமிளங்குழி, பிராஞ்சேரி மற்றும் துணை மின் நிலையங்களின் அருகில் உள்ள கிராம பகுதிகளில் அத்தியாவசிய அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (திங்கட் கிழமை) மின் நிறுத்தம் செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 3 மணி நேரம் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்