1,130 மதுபாட்டில்கள் பறிமுதல்

1,130 மதுபாட்டில்கள் பறிமுதல்

Update: 2021-06-27 18:10 GMT
கோவை

குனியமுத்தூரில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,130 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

மதுபாட்டில்கள் கடத்தல்

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வில்லை. 

இதனால் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பது அதிகரித்தது.

இந்த நிலையில் கோவை குனியமுத்தூரில் ஒரு வீட்டில் மதுபாட்டில் கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா தலைமையில் குனியமுத்தூர் போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு குடோனில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதுதொடர்பாக குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ் (வயது 40), விக்னேஷ் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பிஓடிய திருச்சியை சேர்ந்த சங்கர் (30) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,130 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கோவைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்க மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்