விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்

திட்டக்குடி அருகே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளிடம், அதிகாரிகள் லஞ்சம் வாங்குகின்றனர். இதற்கிடையே அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-06-30 16:32 GMT
திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே சிறுமுளை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சிறுமுளை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது  நெல்மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். 
இந்த கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் நெல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் லஞ்சம் தரவேண்டும், அவ்வாறு விவசாயிகள் தரவில்லையெனில் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என பல்வேறு புகார் எழுந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வைரலாகும் வீடியோ

இதன் காரணமாக வேறு வழியின்றி விவசாயிகள் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாயை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து, தங்களது நெல்மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுமுளை கிராமத்தில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம், இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்