ஓலா நிறுவனத்தின் இருசக்கர மின்வாகன உற்பத்தி ஜனவரியில் தொடங்கும்

ஓலா நிறுவனத்தின் இருசக்கர மின்வாகன உற்பத்தி, ஜனவரியில் தொடங்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Update: 2021-07-02 09:36 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தினர் சமீபத்தில் சந்தித்தனர். கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் அந்த நிறுவனத்தின் இருசக்கர மின்வாகன உற்பத்தி மையம் அமைந்துள்ளது. இன்னும் 6 மாதங்களில் அது செயல்பாட்டிற்கு வரவுள்ளது. அதன்படி ஜனவரியில் அங்கு வாகன உற்பத்தி தொடங்கிவிடும்.

அங்கு ஒரு ஆண்டுக்கு 1 கோடி இருசக்கர மின் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். அந்த நிறுவனத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அந்த நிறுவனத்தில் 3 ஆயிரம் ரோபோக்களும் பணியாற்றும்.

இன்னும் பல தொழில்கள்

திண்டிவனம், செய்யாறில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். கடலூரில் ஹெச்.பி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிலை அமைக்க ஆர்வத்துடன் உள்ளன. வரும் நாட்களில் பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் வர உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்