சோனாங்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு

சோனாங்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-07-02 16:55 GMT
கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகம் அருகே சோனாங்குப்பம் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கடற்கரையையொட்டி அமைந்துள்ளது. 

இங்கு சோனாங்குப்பம் கிராமம் கடற்கரை பகுதியில் கடந்த 1 ஆண்டாக கடலரிப்பு இருந்து வருகிறது.
இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் கூறுகையில், கடல் அரிப்பு கடந்த ஓராண்டாக இருந்து வருகிறது. அதிலும் கடந்த 15 நாட்களாக சற்று அதிகரித்துள்ளது.

இதனால் கடற்கரையை ஒட்டி உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அப்பகுதியில் அமைந்துள்ள கடல் கருப்புசாமி, வல்லத்து அம்மன், கடல் நாகம்மன் ஆகிய சாமிகளை கொண்டு அமைந்துள்ள கோவிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, கடல் அரிப்பை தடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

மேலும் செய்திகள்