சின்னமனூரில் கோவில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண தொகை

சின்னமனூரில் கோவில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டது.

Update: 2021-07-02 17:17 GMT
சின்னமனூர்:
தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களிலும், கிராமப்புறங்களில் உள்ள கோவில்களிலும் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள் என 152 பேருக்கு கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, சின்னமனூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினார். 
இதில், கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், சின்னமனூர் ஒன்றியக்குழு தலைவர் நிவேதா அண்ணாதுரை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்