கிணத்துக்கடவில் சூரியனை சுற்றி ஒளிவட்டம்

கிணத்துக்கடவில் சூரியனை சுற்றி ஒளிவட்டம்

Update: 2021-07-02 17:25 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் தென்மேற்கு பருவமழை இன்னும் சரியாக பெய்ய தொடங்கவில்லை. இதன் காரணமாக இந்த பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 

இந்த நிலையில் வழக்கம்போல வெயில் அதிகமாக இருந்தது. 
அப்போது திடீரென சூரியனை சுற்றி ஒளி வட்டம் ஏற்பட்டது. இதனை கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். 

அத்துடன் சிலர் அதை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். 2 மணி நேரம் அந்த ஒளிவட்டம் இருந்தது. 

சூரியனை சுற்றிலும் ஏற்பட்ட ஒளிவட்டம் குறித்து அறிவியல் ஆசிரியர் ஒருவர் கூறும்போது, வளிமண்டலத்தில் உள்ள பனி படிமங்கள் வழியாக சூரியன் அல்லது சந்திரனின் ஒளி ஊடுருவி செல்லும்போது இதுபோல ஒளிவட்டம் போன்று வட்டவடிவம் தோன்றுகிறது. 

பொதுவாக காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது இதுபோல சூரியனை சுற்றி ஒளிவட்டம் தோன்றுவது வழக்கம் என்றார்.

மேலும் செய்திகள்