நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,410 டன் மக்காச்சோளம் வந்தது

நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,410 டன் மக்காச்சோளம் வந்தது

Update: 2021-07-02 18:08 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவைப்படும் தீவன மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படுவது வழக்கம். இதனிடையே நேற்று பீகார் மாநிலம் பிர்பாந்தியில் இருந்து 2,410 டன் மக்காச்சோளம் சரக்கு ரெயில் மூலம் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. 38 வேகன்களில் கொண்டு வரப்பட்ட மக்காச்சோள மூட்டைகள் அனைத்தும் 90 லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்