கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

Update: 2021-07-02 18:18 GMT
வேலாயுதம்பாளையம்
தோட்டக்குறிச்சி சேங்கல்மலை அடிவாரத்தில் சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதேபோல், புன்னம் பகுதியிலுள்ள புன்னைவன நாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 
இதேபோல் தோகைமலை ஒன்றியத்துக்குட்பட்ட விராச்சிலை ஈஸ்வரர் கோவில், லாலாபேட்டை அருகே உள்ள கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் செய்திகள்