வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது

சாயல்குடி அருகே வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-02 19:03 GMT
சாயல்குடி, 
சாயல்குடி அருகே வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தெற்கு நரிப்பையூர் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் மகன் அபுபக்கர் சித்திக் (வயது26). இவர் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள இடத்தில் கஞ்சா விதைகளை விதைத்து வளர்த்துள்ளார். பழைய குக்கரில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளார். 
இவரிடம் வெள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  ராஜசேகர் (24) கஞ்சா வாங்கிச் சென்றுள்ளார். அப்போது ரோந்தில் ஈடுபட்ட போலீசார் ராஜசேகரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அபுபக்கர் சித்திக்கிடம் கஞ்சா பொட்டலங்கள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் அபுபக்கர் சித்திக் வீட்டை சோதனையிட்டனர். அங்கு  பழைய குக்கரில் சுமார் 6 முதல் 8 கிராம் அளவுள்ள 33 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. 
2 பேர் கைது
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தடயவியல் துறை உதவி இயக்குனர் மினித்தா, கடலாடி தாசில்தார் சேகர், மண்டல துணை தாசில்தார் சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் முனியராஜன் ஆகியோர் கஞ்சா செடிகளை பிடுங்கி தீ வைக்க உத்தரவிட்டனர். கஞ்சா செடிகளை அளித்த சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அபுபக்கர் சித்திக், ராஜசேகர் 2 பேரையும் கைதுசெய்தனர். 

மேலும் செய்திகள்