அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்; பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்

தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை, பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2021-07-02 20:38 GMT
தென்காசி:
தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு பவ்டா தொண்டு நிறுவனம் சார்பில், 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. இதனை பழனி நாடார் எம்.எல்.ஏ., சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் நெடுமாறனிடம் வழங்கினார். பவ்டா தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ஜாஸ்லின் தம்பி, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், காங்கிரஸ் நகர தலைவர் காதர் முகைதீன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இந்தநிலையில் தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. பழனி நாடார், நெல்லையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மின்பகிர்மான வட்டம் உருவாக்க வேண்டும். குற்றாலத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். இதேபோன்று சிறப்பு பொருளாதார மண்டலம் அமையும் வகையில் தென்காசி மத்தளம்பாறை, திரவியநகர் பகுதியிலும் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். கீழப்பாவூர் கல்லூரணி மின்வழித்தடத்தை நகர்ப்புற மின்பீடராக தரம் உயர்த்த வேண்டும். மின்கட்டண வசூல் மையங்களில் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்