புல்லக்காபட்டி அரசு கள்ளர் பள்ளியில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

புல்லக்காபட்டி அரசு கள்ளர் பள்ளியில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

Update: 2021-07-03 13:26 GMT
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 4 லட்சம் செலவில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். அப்போது அவர் தலைமை ஆசிரியர் சாந்தியிடம் பள்ளி செயல்பாடுகள் மற்றும் வசதிகள் பற்றி கேட்டறிந்தார். அப்போது தலைமை ஆசிரியர், பள்ளிக்கு பாதை வசதி ஏற்படுத்தி தருமாறும், அமைச்சுபணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மதுரை மண்டல கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் செல்வராஜ், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், தி.மு.க. மாநில உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா, தேனி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன், கெங்குவார்பட்டி நகர தி.மு.க. செயலாளர் தமிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்