உடுமலை கோவில்களில் கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தன.

உடுமலை கோவில்களில் கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தன.

Update: 2021-07-03 16:46 GMT
உடுமலை, தமிழகம் முழுவதும் நாளை(திங்கட்கிழமை) முதல் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் உடுமலை கோவில்களில் கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தன. பக்தர்களுக்கு அனுமதிதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படாமல் உள்ளது. கோவில்களில் தினசரி அர்ச்சகர்கள் மட்டும் பூஜையை நடத்தி வருகின்றனர். பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையிலும் கோவில் தூய்மையாக வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளின்படி நாளை (திங்கட்கிழமை) காலை முதல் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கியுள்ளது.மாரியம்மன் கோவில்இதைத்தொடர்ந்து உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பக்தர்கள் வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தது.இந்த கோவிலில் நாளை (திங்கட்கிழமை) நடை திறப்புக்காக காலை 6 மணிக்கு கோவிலின் கிழக்கு புறம் உள்ள பிரதான நுழைவு வாயில் (கதவு) முன்பு விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கதவிற்கு தீர்த்தம் தெளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளைத்தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டு கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நடைதிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஶ்ரீதர், செயல் அலுவலர் வி.பி.சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.பிரசன்ன விநாயகர் கோவில்இதேபோன்று உடுமலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் தூய்மை பணிகள் நடந்தன.நாளை நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன

மேலும் செய்திகள்