செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-03 17:11 GMT
காவேரிப்பட்டணம்:
செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9-ம் வகுப்பு மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சந்தாபுரத்தை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 14). பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 
தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி செயல்படாததால் வீட்டில் இருந்த மாணவி செல்போனில் அடிக்கடி விளையாடி வந்தார். மேலும் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தார். 
இதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி, தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனிடைய வீ்ட்டுக்கு வந்த அவரின் உறவினர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 
சாவு
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்