இ-பாஸ் இன்றி வந்த கார்களுக்கு அபராதம்

கேரளாவில் இருந்து கூடலூருக்கு இ-பாஸ் இன்றி வந்த கார்களுக்கு அபராதம் விதித்து பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-07-03 18:43 GMT
கூடலூர்

கேரளாவில் இருந்து கூடலூருக்கு இ-பாஸ் இன்றி வந்த கார்களுக்கு அபராதம் விதித்து பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

தொடரும் இ-பாஸ் நடைமுறை

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி நாளை(திங்கட்கிழமை) முதல் பொதுப்போக்குவரத்து தொடங்குகிறது. மேலும் தமிழகத்துக்குள் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் நடைமுறை தொடர்கிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில், கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லைகள் உள்ளன. இங்கு இ-பாஸ் பெறாமல் கேரளாவில் இருந்து கூடலூர் பகுதிக்கு அதிகளவில் வாகனங்கள் இயக்கப்படுகிறது.

தலா ரூ.5 ஆயிரம் அபராதம்

இதை தடுக்க தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் கூடலூர்- கோழிக்கோடு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த 2 கார்களை நிறுத்தினர். 

பின்னர் அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், இ-பாஸ் இன்றி கூடலூருக்குள் வந்தது தெரியவந்தது. உடனே காரின் உரிமையாளர்களான மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவை சேர்ந்த ரமேஷ், இரும்புலியை சேர்ந்த ஜிபின் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

இதுகுறித்து ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் கூறுகையில், மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்