ஊட்டி நகரில் மழை

ஊட்டி நகரில் மழை

Update: 2021-07-03 18:44 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் காலை முதல் வெயில் அடித்தது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக மாறியது. 

பின்னர் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை பரவலாக விட்டு, விட்டு பெய்தது. மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். 

அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் வருமாறு(மி.மீட்டரில்):- ஊட்டி-7.3, குன்னூர்-1, கேத்தி-14 என மொத்தம் 22.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழை தீவிரமாக வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்