உடுமலை அருகே கணவனின் கள்ளக்காதலியை தீவைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

உடுமலை அருகே கணவனின் கள்ளக்காதலியை தீவைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-07-04 16:28 GMT
போடிப்பட்டி
உடுமலை அருகே கணவனின் கள்ளக்காதலியை தீவைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கொழுமம் ருத்ராபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 36). இவருடைய மனைவி ஞானசுந்தரி (32). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. 
இந்த நிலையில் செல்வராஜூக்கு கொழுமம் பகுதியைச்சேர்ந்த நிஷா (30) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான நிஷா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட செல்வராஜ் அடிக்கடி நிஷாவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. பல நாட்கள் செல்வராஜ் நிஷாவின் வீட்டிலேயே தங்கி விடுவதாகவும் கூறப்படுகிறது. 
கணவன்-மனைவி இடையே தகராறு
இதனால் செல்வராஜூக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு வீட்டுக்கு வந்த செல்வராஜூக்கும், அவரது மனைவி ஞானசுந்தரிக்கும் இதுசம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிஷாவுக்கு போன் செய்த செல்வராஜ் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
உடனடியாக இரவு 11 மணியளவில் செல்வராஜின் வீட்டுக்கு நிஷா வந்தார். இதனைத்தொடர்ந்து ஞானசுந்தரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
உயிரோடு தீவைத்தார்
இதில் ஆத்திரமடைந்த ஞானசுந்தரி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து நிஷாவின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரியும் நிலையில் நிஷா அலறித்துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், நிஷாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். 
இதில் செல்வராஜூக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. இவர்கள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவர்கள் இருவரையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாக்குமூலம்
 பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தீக்காயமடைந்த நிஷா மற்றும் செல்வராஜூக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து நிஷா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசுந்தரியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 
கணவனின் கள்ளக்காதலியை மனைவியே தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்