காரில் கடத்தப்பட்ட 43 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

வெம்பக்கோட்டையில் காரில் கடத்தப்பட்ட 43 மூடை ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-07-07 19:50 GMT
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டையில் காரில் கடத்தப்பட்ட 43 மூடை ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
வாகன சோதனை 
ரேஷன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் சிவானந்தம், முதுநிலை வருவாய் அலுவலர் விக்னேஸ்வரன் ஆகியோர் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
ரேஷன் அரிசி பறிமுதல் 
அப்போது ஆலங்குளத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தினர். அதிகாரிகளை பார்த்ததும், காரை நிறுத்தி விட்டு டிைரவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 
இதையடுத்து காரில் சோதனை செய்து பார்த்த போது  50 கிலோ பைகளாக 43 மூடைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரையும், ரேஷன் அரிசி மூடைகளையும் அவர்கள் பறிமுதல் செய்து விருதுநகர் நுகர்பொருள் வாணிப கிட்டங்கில் ஒப்படைத்தனர். காரின் உரிமையாளர் யார்? காரை யார் ஓட்டி வந்தார், ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்