3 பேர் கைது

பல்லடத்தில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-08 18:28 GMT
பல்லடம்
பல்லடத்தில் தொழிலாளியிடம்  வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
 இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது
வழிப்பறி 
பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்வயது 30 பனியன் நிறுவன தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பினார்.  வெட்டுப்பட்டான் குட்டை ஓடைப் பகுதி அருகே வந்து கொண்டிருந்தர். அப்போது  அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4பேர்  திடீரென்று  சுந்தரை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.4,700 ஆகியவற்றை பறித்துக்கொண்டு   தப்பிச் செல்ல முயன்றனர்..
இதனால் அதிர்ச்சியடைந்த  சுந்தர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து வழிப்பறி செய்த வாலிபர்களை சுற்றிவளைத்தனர். இதில் ஒருவன் மட்டும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டான் மற்ற 3 பேர் பிடிபட்டனர்.அவர்களை தர்ம அடி கொடுத்து  பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். 
 3பேர் கைது
இதையடுத்து போலீசார் அவர்களை விசாரித்தபோது  அவர்கள் திருப்பூர் கரட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த பாரதிப்பிரியன் 20, கரண்குமார், தவபிரகாஷ் 20 என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைதுசெய்த போலீசார் அவர்களிடமிருந்து 1 செல்போன், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதானவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் பணத்துடன் தப்பி ஓடிய மற்றொரு ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்