சிறுமியை திருமணம் செய்த கொசுவலை நிறுவன அதிபர் உள்பட 3 பேர் கைது

சிறுமியை திருமணம் செய்த கொசுவலை நிறுவன அதிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-09 19:52 GMT
கரூர்
கரூர்
கரூர் மண்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் விவேக்(வயது 23). கொசுவலை கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கும், கோவை புலியகுளத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்மங்கலம் ஈஸ்வரன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வட்டார நல அலுவலர் சிறும்பாயிக்கு சமூக நல ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர். அவர், இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மணிகண்டன் விசாரணை நடத்தினார். பின்னர், விசாரணையின் அடிப்படையில் சிறுமியை திருமணம் செய்ததாக குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் விவேக் மீதும், திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக விவேக்கின் தந்தை கோபால் (54), தாய் வாசுகி (45) மற்றும் சிறுமியின் பாட்டி அந்தோணியம்மாள் (65) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விவேக், கோபால், வாசுகி ஆகிய 3 பேரை கைது செய்தார். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்