தடுப்பூசி முகாம் 33 இடங்களில் நடக்கிறது

தடுப்பூசி முகாம் 33 இடங்களில் நடக்கிறது

Update: 2021-07-11 18:58 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதாவது ஆரோக்கியபுரம் ஆரோக்கிய அன்னை நினைவு பள்ளி, சூரப்பள்ளம் அரசு தொடக்க பள்ளி, தேவசகாயம் மவுண்ட் ஆர்.சி. நடுநிலை பள்ளி, குறும்பனை புனித இக்னேஷியஸ் மேல்நிலை பள்ளி, மத்திகோடு எல்.எம்.எஸ். உயர்நிலை பள்ளி, சூழால் அரசு தொடக்க பள்ளி, குழித்துறை காட்டுவிளை சுய உதவிக்குழு கட்டிடம், சுருளோடு புனித அந்தோணியார் உயர்நிலை பள்ளி, கண்டன்விளை அரசு மேல்நிலை பள்ளி, இசங்கன்விளை அரசு தொடக்க பள்ளி மற்றும் பூதப்பாண்டி, குழித்துறை, குளச்சல், சேனம்விளை, கன்னியாகுமரி, அருமனை, குலசேகரம், கருங்கல், பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
நாகர்கோவில் புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் கோவிஷீல்டு 2- ம் டோஸ் மட்டும் போடப்படுகிறது. இந்த முகாம்களில் நேரடியாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. இதில் 18 முதல் 44 வயதினருக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.
ஆன்லைன் மூலம் https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் டோக்கன் வழங்கப்படும் தடுப்பூசி முகாம்கள் விவரங்கள் வருமாறு:-
செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம்துறை, குருந்தன்கோடு, கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நாகர்கோவில் டதி பள்ளி, வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலை பள்ளி ஆகியவற்றிலும் கோவிஷீல்டு 18 முதல் 44 வயது வரையிலும், 45 வயதுக்கு மேலும் தடுப்பூசி போடப்படுகிறது.
மேலும் வெளிநாடு செல்வோருக்கான 2-வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி குழித்துறை அரசு ஆஸ்பத்திாி மற்றும் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்