விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

Update: 2021-07-12 17:06 GMT
திருவண்ணாமலை

தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் உள்ளதால் வரி வருவாயை பெருக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உழவர் பேரவை அமைப்பை சேர்ந்த விவசாயிகள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.

அப்போது விவசாயிகள் கையில் மதுபானம், பெட்ரோல் மற்றும் பானையுடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள் வழங்குவதற்கு தனி பட்ஜெட் அறிக்கை தயார் செய்ய டாஸ்மாக் மற்றும் பெட்ரோல், டீசல் வரியை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பானையில் பெட்ரோல் மற்றும் மதுபானத்தை ஒன்றாக கலந்து காண்பித்தனர். மேலும் உழவர்களுக்கு தனிப் பட்ஜெட் அறிக்கை தயார் செய்ய விவசாயிகளை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் எனக் கோஷம் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவா, நிர்வாகிகள் சம்பத், சின்னபையன், சரவணன், வாசுதேவன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் இது குறித்த கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.

மேலும் செய்திகள்