திருப்பத்தூர் மாவட்டம் கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் வழங்கியதில் முதலிடம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கியதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

Update: 2021-07-13 18:07 GMT
திருப்பத்தூர்
 
நிவாரண நிதி

கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் 2 தவணையாக வழங்கப்பட்டது. மேலும் கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, புளி, துவரம்பருப்பு, கடுகு, சீரகம், மஞ்சள்தூள், சோப்பு, உள்ளிட்ட 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பும் இலவசமாக வழங்கப்பட்டது.

நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் கூட்டத்தை குறைக்கும் வகையில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்கி, ஒரு நாளைக்கு 200 பேருக்கு மட்டும் நிவாரண உதவித்தொகை, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

முதலிடம் 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 13 ஆயிரத்து 57 குடும்ப அட்டைதாரர்களில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 640 பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இது 99.87 சதவீதமாகும். இதன் மூலம் தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

முதலிடத்தை பிடித்ததற்காக மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் உள்ளிட்டவர்களை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா பாராட்டினார்.

மேலும் செய்திகள்