சங்கராபுரம் பகுதியில் கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு

சங்கராபுரம் பகுதியில் கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு

Update: 2021-07-16 16:54 GMT
சங்கராபுரம்

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கோவிட் சிறப்பு நிதி பெற்ற பயனாளிகள் சங்கராபுரத்தில் ஆவின் பாலகம், முடி திருத்தும் கடை, பிசியோதெரபி கிளினிக் ஆகிவற்றை நடத்தி வருகிறார்கள். இந்த பயனாளிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அ.பாண்டலத்தில் உள்ள மளிகை மற்றும் டீ கடை, ராஜபாளையத்தில் நர்சரி தோட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் மகளிர் சுய உதவி குழுவினரிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து புதிய தொழில் முனைவோருக்கான ரூ.40 ஆயிரம் காசோலைகளை 2 பேருக்கு வழங்கினார். 

இதில் மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ்குமார், செயல் அலுவலர்கள் முத்துராஜா, பழனிசாமி, ராஜா, சதீஷ்குமார், அணித்தலைவர்கள் ஏழுமலை, காமராஜ், யாழினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, ரவிச்சந்திரன், மகளிர் குழு கூட்டமைப்பின் செயலாளர் பாப்பாத்தி நடராஜன், வட்டார பணியாளர்கள் முத்தரசி, ஜெகன், வருவாய் ஆய்வாளர் திருமலை ஆகியோர் கலந்துகொண்டனர். 
முன்னதாக சோழம்பட்டு உழவர் உற்பத்தியாளர் குழுவினரின் தீவன உற்பத்தி மையத்தை பார்வையிட்ட கலெக்டர்  ஸ்ரீதர் புதிய தொழில்முனைவோர் 5 பேருக்கு காசோலைகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்