சென்னை விமான நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் கைது

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட்டு மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.

Update: 2021-07-18 09:58 GMT
அப்போது நாமக்கல்லை சோ்ந்த ஷெரீப் (வயது 36) என்பவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தனா். அதில் 2019-ம் ஆண்டு சென்னை எம்.கே.பி.நகா் போலீஸ் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும், ஆனால் அவா் போலீசிடம் சிக்காமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதும் தெரிந்தது. இதையடுத்து சென்னை மாநகர போலீசாா், 2019-ம் 
ஆண்டு ஜூலை மாதம் ஷெரீப்பை தேடி வருவதாக விமான நிலையங்களுக்கு தகவல் தந்து இருந்தனர்.

இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்த போது சிக்கிக்கொண்டாா். ஷெரீப்பை கைது செய்த குடியுரிமை அதிகாரிகள், இதுபற்றி சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விமான நிலையம் வந்த சென்னை மாநகர போலீசாா் ஷெரீப்பை அழைத்து சென்றனா்.

மேலும் செய்திகள்