தொழிலாளி பலி

சாத்தூர் அருகே கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-20 19:11 GMT
சாத்தூர், 
வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது49). தொழிலாளியான இவர் சாத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் உள்ள ஒரு கடையில் சிமெண்ட் சீட் அமைப்பதற்காக மேற்கூரையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனே அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்