மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற 2 பேருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்

மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற 2 பேருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-07-20 21:34 GMT
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சர்க்கரை ஆலை நரிக்குறவர் காலனி பகுதியில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதாக மாவட்ட வன அலுவலர் குகணேசுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி பெரம்பலூர் வனச்சரகர் சசிகுமார், வனவர் குமார், வன காப்பாளர்கள் பொன்னுசாமி, அன்பரசு ஆகியோர் எறையூர் நரிக்குறவர் காலனியில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் மணிகண்டன்(வயது 37), மாவீரன்(33) ஆகிேயார் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்ய தயாரானது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிந்து 2 பேருக்கும் சேர்த்து ெமாத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மானின் இறைச்சியை கைப்பற்றி புதைத்தனர்.

மேலும் செய்திகள்