பிளஸ்-2 மாணவி கடத்தல்; போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது

மாணவியை கடத்தி சென்ற டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-20 22:06 GMT
சேலம்:
மாணவியை கடத்தி சென்ற டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடத்தி சென்றார்
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). டிரைவர். இவர், கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி பிளஸ்-2 படித்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கெங்கவல்லி போலீசில் புகார் செய்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் சேலம் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகார் கொடுத்து பல நாட்கள் ஆகியும் மகளை கண்டு பிடிக்கவில்லை எனக்கூறி மாணவியின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மாணவியை கண்டுபிடித்து தருவதாக போலீசார் உறுதி அளித்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது
இந்த நிலையில் முருகேசனின் செல்போன் எண்ணை  போலீசார் கண்காணித்தனர் அப்போது முருகேசன் கோவையில் ஒரு வீட்டில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கோவை சென்று அவரை பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து முருகேசனை சேலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகேசனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்