தேசிய இளையோர் தன்னார்வ தொண்டர்களுக்கான நேர்காணல்

தேசிய இளையோர் தன்னார்வ தொண்டர்களுக்கான நேர்காணல் கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2021-07-21 14:21 GMT
கடலூர், 

ஆண்டுதோறும் தேசிய இளையோர் தன்னார்வத் தொண்டர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2021-22-ம் ஆண்டுக்கான அறிவிப்பு, கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதில் 223 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களுக்கான நேர்காணல் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இந்த நேர்காணலில் 95 தன்னார்வ விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் நேர்காணல் நடத்தியதன் அடிப்படையில் வட்டாரத்திற்கு 2 நபர்கள் வீதம், மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரத்திற்கும் 26 நபர்கள், மாவட்ட அலுவலகத்திற்கு 2 நபர்கள் என 28 பேர் தேசிய இளையோர் தன்னார்வத் தொண்டர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) டெய்சி குமார், மாவட்ட இளைஞர் அலுவலர் (நேரு யுவகேந்திரா) ரிஜேஷ்குமார், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன், மாநில பிரதிநிதி ரிஷிசக்ரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்