ஆரம்ப சுகாதார நிலையங்களில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு

Update: 2021-07-21 17:11 GMT
பொள்ளாச்சி

ஆனைமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அங்கு கழிப்பிடம், தொட்டி சுத்தம் இருப்பதை பார்த்த சப்-கலெக்டர் அதிகாரிகளிடம் உடனடியாக அவற்றை சுத்தம் செய்வதற்கு உத்தரவிட்டார்.  மேலும் கட்டிட வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது ஆய்வு நடத்தப்பட்டது. 

இதற்கிடையில் கொரோனா 3-வது அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளதா? என்று சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.  

இதேபோன்று பெரியபோது ஆரம்ப சுகாதார நிலையத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

 அப்போது அவர் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்