துணை தாசில்தார்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு

கோத்தகிரியில் கணக்கில் வராத பணம் சிக்கிய விவகாரத்தில் துணை தாசில்தார்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-07-21 17:53 GMT
கோத்தகிரி,

கோத்தகிரியில் கணக்கில் வராத பணம் சிக்கிய விவகாரத்தில் துணை தாசில்தார்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

அதிரடி சோதனை

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் அனுபோக சான்றிதழ் வழங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷினி தலைமையிலான போலீசார் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. அதில் கணக்கில் வராத ரூ.42 ஆயிரத்து 690 பறிமுதல் சிக்கியது. 

8 பேர் மீது வழக்கு

இது தொடர்பாக தலைமையிடத்து துணை தாசில்தார் தனலட்சுமி, மண்டல துணை தாசில்தார் ஜெயந்தி, நெடுகுளா வருவாய் ஆய்வாளர் கோபிநாத், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், கமல், பிரதீப்குமார், யுவராஜ் உள்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்