வேலூர் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தது

9 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தது

Update: 2021-07-21 18:03 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்தநிலையில் வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்காக 9 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தது.

 கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கூடுதலாக தடுப்பூசி வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்